×

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா சிறை தண்டனை 10 ஆண்டாக அதிகரிப்பு தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (73). இவர் தனது பதவிக் காலத்தின்போது கணவரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு வௌிநாடுகளில் இருந்து முறைகேடாக நன்கொடை பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி கலீதாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இந்த தண்டனையை அதிகரிக்கும்படி நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.  

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கலீதாவுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக அதிகரித்து நேற்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட கலீதாவின் மகன் தாரீக் ரஹ்மான், கமல் உத்தின் சித்திக், சலிமுல், ஷர்புதீன் மற்றும் ஜியாவுர் ரஹ்மானின் உறவினர் மொமினுர் ரஹ்மான் ஆகியோரின் தண்டனையும் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தண்டனை காலம் அதிகரிக்கப்பட்டதால், அடுத்த தேர்தலில் கலீதாவால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Khaleda Jail ,Bangladesh ,election , Bangladesh's former prime minister, Khalida, prison
× RELATED வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்